ராஜபக்சக்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்திக்குதேவையில்லை -முஜிபுர் ரஹ்மான்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நாட்டு மக்களை தமது கட்சி எப்போதும் நம்புவதாக குறிப்பிட்டார்.
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்கள் தற்போதைய ஜனாதிபதியுடன் உள்ளனர்.
தங்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் தற்போதைய ஜனாதிபதியை சுற்றி திரள்கின்றனர்.
ராஜபக்சக்களால் ஏற்பட்ட நெருக்கடியினால் அவர்களின் அரசியல் இயக்கம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்