லுகைகளுக்காகஇ கட்சி மாறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தே.ம.சக்தி
பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் கட்சி மாறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார செய்தியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பியகம, மல்வான பிரதேசத்தில் முஸ்லிம் சகோதரத்துவ பேரணி இடம்பெற்றது. அதில் திரு அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சகோதரத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவது பற்றி மக்களிடம் எதிர்பார்ப்ப்பு இருந்தது. ஆனால் எந்தவொரு அரசாங்கமும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.