வானொலி நாடக வடிவமாகிறது “மடோல் தூவ” நாவல்
தலைசிறந்த சிங்கள எழுத்தாளர் அமரர் மார்ட்டின் விக்ரமசிங்க எழுதிய மடோல் தூவ என்ற நாவல், வானொலி நாடக பிரதியாகிறது.
இந்த முயற்சி பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.
சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் மடோல் தூவ வானொலி நாடகத்தின் முதல் தயாரிப்பாளராக திகழ்ந்த தேசிய வானொலியின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் எண்ணக்கருவுக்கு ஏற்ப நாவல் நாடாகமாகிறது.
சிங்கள சேவை பணிபாளர் இந்திக்க ஜயரட்னவின் மேற்பார்வையில் புதிய நாடகம் தயாரிக்கப்படும். இதனை பிரியந்தினி கமகே தயாரித்தளிக்கிறார்.
இன்றைய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க, 100ஆவது ஆண்டு நிறைவை நோக்கி நகரும் தேசிய வானொலி, தொடர்பாடல் பணியை வலுவாக முன்னெடுக்கிறது என்றார்.
இதற்கமைய நேயர்களின் ரசனையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மடோல் தூவ நாவலை வானொலி நாடகமாக தயாரித்தளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மடோல் தூவ நாவலை வானொலி நாடகமாக மாற்றுவதற்காக திரு.ஹட்சன் சமரசிங்க ஆற்றும் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததென நாடக பிரதி எழுத்தாளர் கருணாரட்ன அமரசிங்க தெரிவித்தார்.
ஆரம்பகட்ட நாடக தயாரிப்பில் பங்கேற்ற கலைஞர்களை தலைவர் பாராட்டி கௌரவித்தார். இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் மயூரி அபேயசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றார்கள்.