லியோனிட் விண்கல் மழையை இலங்கையில் அதிகபட்சமாக பார்க்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் (18) நாளையும் (19) விண்கல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு 10-15 விண்கற்கள் வரை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்கு மேல் கிழக்கு அடிவானத்தில் உள்ள சிம்ம ராசியை பார்க்கும் போது இந்த விண்கல் தென்படும் என்று கூறப்படுகிறது.