Home » விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

Source

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்புல்ல பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

The post விமல் வீரவன்சவுக்கு பிடியாணை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both