Home » வெலிக்கடை சிறை இனப்படுகொலையும், சிலை திறப்பும்

வெலிக்கடை சிறை இனப்படுகொலையும், சிலை திறப்பும்

Source

வெலிக்கடை சிறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை இருவரின் சிலை எதிர்வரும் 25/07/2026, ல் யாழ்ப்பாணம் வல்வட்டித்துறையில் திறக்கப்படுவது வரவேற்கத்தக்க விடயம்.
1983, யூலை,23, தொடக்கம் யூலை,30, வரை இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட தென்பகுதியில் ஜே .ஆர் ஜெயவர்தன, பிரதமர் ஆர் பிரமதாசா ஆகியோரின் கூட்டு இனப்படுகொலையில் 1983, யூலை,25, யூலை,27, ஆகிய இரு தினங்கள் வெலிக்கடை சிறையில் 53, தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதில் குட்டிமணி,தங்கத்துரை இருவரின் சிலைகள் மட்டுமே 43, ஆண்டுகளுக்கு பின்னர் சிலைகள் நிறுவி திரைநீக்கம் செய்யப்படுவதை பாராட்டபட வேண்டும்.

ஆனால்..?

வெலிக்கடை சிறையில் உயிர் நீத்த 54, தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களை அந்த சிலை அமைக்கப்படும் சுற்றுவட்டத்தில் கருங்கல்லில் பெயர்களை பொறிப்பது இன்னும் சிறப்பாக அமையும்.

வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட 54, பெயர் விபரங்கள்.

1983,யூலை,25, ல் கொல்லப்பட்டவர்கள்.

  1. தங்கத்துரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்.
  2. குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்.
  3. ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
  4. தேவன் என்று அழைக்கப்படும் செல்லத்துரை சிவசுப்பிரமணியம்
  5. சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
  6. செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
  7. அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லத்துரை ஜெயரெத்தினம்.
  8. அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
  9. ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
  10. சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமா.
  11. சின்னத்துரை அருந்தவராசா.
  12. தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
  13. மயில்வாகனம் சின்னையா
  14. சித்திரவேல் சிவானந்தராஜா
  15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
  16. தம்பு கந்தையா
  17. சின்னப்பு உதயசீலன்.
  18. கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
  19. கிருஷ்ணபிள்ளை நாகராஜா.
  20. கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
  21. அம்பலம் சுதாகரன்
  22. இராமலிங்கம் பாலச்சந்திரன்
  23. பசுபதி மகேந்திரன்.
  24. கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
  25. குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்.
  26. மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்.
  27. ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்.
  28. ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
  29. கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்.
  30. யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்.
  31. அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்.
  32. அந்தோணிப்பிள்ளை உதயகுமார்.
  33. அழகராசா ராஜன.
  34. வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
  35. சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்

1983,யூலை, 27, ல் கொல்லப்பட்டவர்கள்

  1. தெய்வநாயகம் பாஸ்கரன்
  2. பொன்னம்பலம் தேவகுமார்
  3. பொன்னையா துரைராசா
  4. முத்துக்குமார் ஶ்ரீகுமார்
  5. அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
  6. செல்லச்சாமி குமார்
  7. கந்தசாமி சர்வேஸ்வரன்
  8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
  9. சிவபாலம் நீதிராஜா
  10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்
  11. கந்தையா ராஜேந்திரம்
  12. டாக்டர் ராஜசுந்தரம்
  13. சோமசுந்தரம் மனோரஞ்சன்
  14. ஆறுமுகம் சேயோன்
  15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
  16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
  17. செல்லப்பா இராஜரட்னம்
  18. குமாரசாமி கணேசலிங்கன்

வெலிக்கடை சிறையில் 35 +18=53, தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களும் கருங்கல்லில் பொறிக்கப்படுவது நல்லது.
-அரியம்.

வெலிக்கடை சிறையில் உயிர் தப்பியவர்கள் இவர்கள் மொத்தம் 19, பேர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அப்படித் தப்பிய எஞ்சிய 19 தமிழ்க் கைதிகள்

  1. அந்தோனிப்பிள்ளை (அழகிரி)
  2. மாணிக்கம் தாசன்
  3. கணேசலிங்கன்
  4. ஶ்ரீதரன்
  5. டக்ளஸ் தேவானந்தா
  6. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்
  7. சிவசுப்பிரமணியம்
  8. ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)
  9. பாபுஜி
  10. டேவிட் ஐயா
  11. வண.குரு சின்னராஜா
  12. கோவை மகேசன்
  13. ஜெயகுலராஜா
  14. மு.நித்தியானந்தன்
  15. ஜெயதிலகராஜா
  16. டாக்டர் தர்மலிங்கம்
  17. வண.பிதா சிங்கராயர்
  18. யோகா எனப்படும் எஸ்.யோகராஜா
    19.நிர்மலா நித்தியானந்தன்.

1983 செப்டம்பர் 23 ,ல் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்பக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து கொண்டுவரப்பட்ட 19, தமிழ் அரசியல் கைதிகள் உட்பட ஏற்கனவே மட்டக்களப்பு சிறையில் இருந்த கைதிகள் உட்பட 41, பேர் சிறையில் இருந்து மீட்கப்பட்டனர்.இந்த சிறை உடைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக அப்போதய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன கூறினார்.

இந்தப்பதிவு மறந்துவரும் வரலாற்றை மீளவும் இளைஞர்கள் அறிவதற்காகவே எனது பதிவு இது..!

-பா.அரியநேத்திரன்.
21/07/2026

The post வெலிக்கடை சிறை இனப்படுகொலையும், சிலை திறப்பும் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both