வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 422 அரசியல் கட்சிகளும், 284 சுயேட்சைக் குழுக்களும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஐயாயிரத்து ஆறு வேட்பாளர்களும், மூவாயிரத்து 346 சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளிட்ட மொத்தமாக எண்ணாயிரத்து 352 வேட்பாளர்கள் விருப்பு இலக்கங்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான 966 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்தளவானோர் போட்டியிடுகின்றனர். அந்த எண்ணிக்கை 120 ஆகும்.
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில், வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்று காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரஞ்சித் விமலசூரிய தலைமையில் இது நடைபெற்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஒன்பது சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 312 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.