ஹரீன், மனுஷ ஆகியோருக்கு பதிலாக பொருத்தமானவர்கள் பாராளுமன்றத்திற்கு பெயரிடப்படுவார்கள் – ஐ.ம.சக்தி
உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், மனுஷ நாணயக்கார, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போவதால், அவர்களின் வெற்றிடத்திற்கு பொருத்தமானவர்களை நியமிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.
மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு காலி மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் பந்துலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னாள் அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டனர்;. தமது எதிர்கால அரசியல் பயணம் பற்றி விளக்கம் நோக்கில் அவர்கள் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதற்கு ஒத்துழைப்பு வழக்காமல், அரசாங்கத்துடன் சேர்ந்தமைக்காக அமைச்சுப் பதவிகளையும் பாராளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாதொழித்த ஒரேதரப்பு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே என திரு.மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். நாட்டை முன்னெடுத்துச் செல்லும் தேவை சஜித் பிரேமதாஸவிற்கு இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், தாம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக குறிப்பி;டார். இதன்மூலம் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடிந்ததாகவும் அவர் கூறினார்.