அமெரிக்க இராஜதந்திரியை சந்தித்த மைத்ரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நேற்று (14) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணி மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குள் விவாதத்தில் பல படிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி, இலங்கைக்கு வழங்கிய தாராளமான ஆதரவிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெளிவிவகார செயலாளர் சஜிந்த வாஸ் குணவர்தன, இலங்கை தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி சமில லியனகே, இலங்கை தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.