Home » இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் இலங்கையர்களின் குடியுரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடமாடும் சேவை

இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பும் இலங்கையர்களின் குடியுரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடமாடும் சேவை

Source
Share Button

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்திலும், நவம்பர் மாதம் முதலாம்; திகதி கிளிநொச்சியா திறன் அபிவிருத்தி நிலையத்திலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image