இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் 29 தேடப்படும் சந்தேகநபர்கள் டுபாயில்
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தேடப்படும் சந்தேக நபர்களை இன்டர்போல் உதவியுடன் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய 30 நபர்களை கைதுசெய்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேடப்படும் 30 சந்தேகநபர்களில் 29 பேர் டுபாயில் இருப்பதாகவும், ஒருவர் பிரான்ஸில் இருப்பதாகவும் அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார்.
தேடப்படும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேட நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டாலும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.