இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்ட்டன் வலியுறுத்தியுள்ளார். நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.