இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில், ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1 சதவீதமாக இருந்தது.
மேலும், ஒக்டோபர் மாதத்தில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2023 ஒக்டோபரில் உணவு அல்லாத பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.