Home » இலங்கையில் முதன்முறையாக சீன மரதன் ஓட்டம்!

இலங்கையில் முதன்முறையாக சீன மரதன் ஓட்டம்!

Source

இலங்கையில் முதல் முறையாக மாபெரும் சீன மரதன் ஓட்டம் மே மாதம் நடத்தப்படவுள்ளது.

அதில் ‘நி ஹாவ் சோங் குவோ’ (Ni Hao Zhong Guo) என்ற திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வருகை தரும் 2000 தொடக்கம் 3000க்கும் மேற்பட்ட சீன விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.

இதனை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஷிரந்த பீரிஸ் அங்கு இரண்டு வருட காலப்பகுதிக்குள் மேலதிகமாக சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ‘நி ஹாவ் சோங் குவோ திட்டத்தில் கைச்சாட்திட்டுள்ளார்.

அதன்படி, இவ்வருடம் மே மாதம் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை மரதன் ஓட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, உனவட்டுன ககடற்கரைப் பகுதியில் கடல் உணவு திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

குறித்த கடல் உணவு திருவிழாவை வருடாந்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு தெரிவித்துள்ளார்.

இலங்கை ‘நி ஹாவ் சோங் குவோ திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு வருடங்களில் 10 இலட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு, இதன்காரணமாக 225 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image