இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவை இன்று அதன் 44 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. இது நாட்டின் முதலாவது பிராந்திய வானொலி சேவையாகும். 1979ஆம் ஆண்டு ஏப்பிரல் 12ஆம் திகதி இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமைகாட்டிய பலரை அறிமுகப்படுத்துவதற்கும் கடந்த 44 வருடங்களில் ரஜரட்ட சேவை பணியாற்றியுள்ளது. நிறைவாண்டை முன்னிட்டு பல்வேறு சமய அனுஷ்டானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.