இலங்கை கிரிக்கெட் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்
சர்வதேச கிரிக்கெட் சபை மூலம் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிக்க வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.