இலங்கை – மாலைதீவுகளுக்கு இடையே விமான அம்பியூலன்ஸ் சேவை
இலங்கை மற்றும் மாலைதீவை இணைக்கும் விமான அம்பியூலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்மூலம் மாலைதீவு மக்களுக்கு விரைவான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
மாலைதீவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கப்டன் மொஹமட் அமீன் மற்றும் இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இருந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.