ஊழல் மோசடி: சஜித் பிரேமதாச கட்சியை விட்டு விலகியதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு.
ஐக்கிய தேசியக் கட்சியில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இருந்தமையினால்இ சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் அக்கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக தற்போதைய ஜனாதிபதி வீசா ஒப்பந்தத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெருமளவு பணம் மோசடி செய்யப்படுவது வருந்தத்தக்கது. மோசடி மற்றும் ஊழலற்ற ஆட்சியை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக அசோக அபேசிங்க தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச குழுவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் பணத்தை மோசடி செய்யும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.