Home » எரிபொருள் கட்டணத்தில் அடுத்த மாதம் முதல் சலுகை

எரிபொருள் கட்டணத்தில் அடுத்த மாதம் முதல் சலுகை

Source
  நாட்டில் எண்ணெய் அகழ்வு தொடர்பான கருத்துகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதுபற்றிய சட்டங்கள் இதுவரை வகுக்கப்படவில்லை என்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தின் ஊடாக இதற்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் கூறினார். இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா உரையாற்றினார். மசகு எண்ணெய் வள விநியோகஸ்தர்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என விவாத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார். அடுத்த மாதம் முதல் எரிபொருள் மாணியத்தையும் வழங்க முடியும். எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் மின்சார கட்டண பட்டியலிலும் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.  
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image