ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை சர்வமத நிகழ்வுகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளைய தினம் சர்வமத நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரதி தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி வழுகாராம, ஹுனுப்பிட்டிய கங்காராம, கொச்சிக்கடை சிவன் கோவில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கொழும்பு தவடகஹா பள்ளிவாசல் போன்றவற்றில் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது நிறைவாண்டு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.
