Home » கார்த்திகைப் பூ தமிழ்த் தேசியத்தின் அடையாளம்!

கார்த்திகைப் பூ தமிழ்த் தேசியத்தின் அடையாளம்!

Source

கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலட்சினை அல்ல அது தமிழ்த் தேசிய இனத்தின் தாயகச்சூழலின் அடையாளமே என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள்.

சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழர் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்கு தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப் பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் தெரிவு செய்துள்ளது.

இலங்கைக்காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை.

அந்நியச் செலாவணி
இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும் தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப் பூவைத் தெரிவு செய்ய நேர்ந்தது.

கார்த்திகைப் பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம் அருமருந்துகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.

இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப் பூச்செடியால் பல கோடி ரூபாய்கள் அந்நியச் செலாவணியாகக் கிடைத்து வருகிறது.

ஆனால், கார்த்திகைப் பூச்செடியின் சிறப்புகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது.

இயற்கை அதன் பரிணாம பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை இலங்கைத் அரசு நினைவிற்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image