இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து, ப்ரைடு ரைஸ் மற்றும் ஒரு கப் பால் தேநீர் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும்,தேநீரின் விலை 5 ரூபாவினாலும், உணவுப்பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், ப்ரைய்ட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவற்றின் விலைகள் 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.