சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை வெற்றி

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டுக்கு வந்துள்ள நிதியத்தின் மேலதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிரதமர் அலுவலகத்தில் நேற்று ஆரம்பமானது. சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பத்துப் பேர் கொண்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. இவர்கள் நாட்டில் பத்து நாட்கள் தங்கியிருப்பார்கள். நே;று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
