டெங்கு நோயாளர்களின் எண்ணி;க்கையில் கணிசமான அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் பகுதியில் இருந்து, இது வரை நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எனக் கருதப்படும் சுமார் 25 ஆயிரம் பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேல் மாகாணத்தில் ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காண்பபட்டுள்ளார்கள். இது 41 தசம் 7 சதவீத அதிகரிப்பாகும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.
