இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை 2023 பெப்ரவரி 6ஆம் திகதி முன்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் விவகாரக் குழு நேற்று இணைய வழியில் கூடியபோதே மேற்படி தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி வவுனியாவில் கூடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனவரி 6ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறும் மத்திய குழுக் கூட்டத்தில் தேசிய மாநாட்டை பெப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்பு நடாத்தும் திகதியை தீர்மானிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் விவகாரக் குழு நேற்று கூடியபோதே மேற்படி தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுவதாகவும் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய கட்சிகளிற்கு சாதகமான இடங்கள் தொடர்பில் 3 கட்சிகளும் கூடி முடிவை எட்டுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
TL