துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்
துறைமுகத்தில் இன்று (28) ஆரம்பிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கைக்கு துறைமுக அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக, தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகன தெரிவித்தார்.