தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகள்: ஊடக அறிக்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட செலவு அறிக்கையை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் வேட்பாளர் கையொப்பம், ஆணையாளர் உறுதி அல்லது சமாதான நீதவான் உறுதிப்படுத்தலுடன், ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளர் சார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பொறுப்பேற்கப்பட்ட நன்கொடைகள் அல்லது ஒத்துழைப்புக்கள், அன்பளிப்புகள், கடன்கள், முற்பணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.