Home » நட்டம் ஏற்படுவதாகக் கூறி டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனங்கள்

நட்டம் ஏற்படுவதாகக் கூறி டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனங்கள்

Source

டீசல் விற்பனையில் நட்டம் ஏற்படுவதாகக் கூறி, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதனை சமாளிப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிப்பது, அரசாங்க மானியம் வழங்குவது அல்லது தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு விலை வரம்புகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய உள்நாட்டு விலையை மேலும் அதிகரித்தால் அதன் சுமையை நுகர்வோரால் தாங்க முடியுமா என்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் ஒரு லீற்றர் டீசல் விற்பனையில் சுமார் ரூ.140 முதல் ரூ.170 வரை நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சில தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் டீசல் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நாட்டில் ஒட்டுமொத்தமாக எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் தமது செலவுகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை நிர்ணயிக்கக்கூடிய வகையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச விலை வரம்புகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

The post நட்டம் ஏற்படுவதாகக் கூறி டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both