நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் வேகமாகப் பரவுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு அறிவித்துள்ளது. கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் அண்மைக்காலமாக கூடுதலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். நாட்டில் தற்சமயம் 3 வகையிலான டெங்கு நோய்ப் பிரிவுகள் பரவுவதாக ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டொக்டர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் எச்சரிக்கையாக செயற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.