Home » “பற்றிக் பிறவுன் பற்றி ஒரு பார்வை”

“பற்றிக் பிறவுன் பற்றி ஒரு பார்வை”

Source

கனடாவின் கன்சர்வேடிவ் கட்சிக்கு புதிய தலைமைக்கான போட்டியில் பலர் ஈடுபட்டுள்ளனர். மேலும் விரும்புபவர்கள் இப்போட்டியில்  நுழைவதற்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டியில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களிடையே அதிக வாய்ப்புள்ள முக்கியமான போட்டியளர்களில் முதல்  மூவர் முன்னிடத்தில் உள்ளனர். இவர்களில் பியர் பொய்லியேவ், பற்றிக் பிரவுன் ஆகிய இருவரில் ஒருவருக்கே அதிகவாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது.  

Pierre Poilievre (பியர் பொய்லியேவ் ) :-

 42 வயதான நீண்டகால ஒட்டாவா பகுதி பாராளுமன்ற உறுப்பினர்.  கட்சி உறுப்பினர்களுக்கு அவர் உறுதியளித்த விஷயங்களில் ஒன்று மத்திய அரசின் கார்பன் வரியை ரத்து செய்வதாகும்.

 

  Patrick Brown (பற்றிக் பிறவுன்) :-                                           பிறம்ரன் நகரபிதாவும், ஒன்டாரியோவின்
முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர். இவர் முன்பு எம்.பி.யாக பதவி வகித்தவர் கனடாவின் "கலாச்சார சமூகங்களின்" உறுப்பினர்களுடன் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டங்களுடன் அவர் ஒரு பெரிய கன்சர்வேடிவ் கூடாரத்தை அமைத்துள்ளார். 

 
Jean Charest (ஜேன் சாரேஸ்ற்) : 1990களின் மத்தியில் கூட்டாட்சி முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் கியூபெக் முதல்வர் மீண்டும் அரசியலில் குதித்து கல்கேரியில் தனது பிரச்சாரத்தை முறையாக தொடங்கினார். அவர் “Built to Win” (வெற்றிக்கு நிர்மாணிக்கபட்டது) என்ற முழக்கத்தின் கீழ் இயங்குகிறார். 63 வயதான சாரெஸ்ட், கட்சி உறுப்பினர்களுக்கு தனது பல வருட அனுபவத்தை எடுத்துரைக்கிறார். 

 Leslyn Lewis (லெஸ்லின் லூயிஸ்) : 2020 கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி தலைமைப் பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் மீண்டும் ஓடுகிறார். கடந்த இலையுதிர்காலத்தில் தென்மேற்கு ஒன்ராரியோவின் ஹல்டிமண்ட்-நோர்ஃபோக் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். 
Roman Barber (ரோமன் பாபர்): இவர் ஒன்ராரியோ மாகணசபை உறுப்பினர். பிரீமியர் டக் ஃபோர்டு, 2021 ஜனவரியில் கோவிட்-19 பூட்டுதல்களுக்கு எதிராகப் பேசியதற்காக ஒன்ராரியோ மாகண முற்போக்கு பழமைவாதக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு சுயேட்சை மாகணசபை உறுப்பினராக திகழ்கிறார்.   

இப்போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களிலே தமிழ்ச் சமூகத்தின் மீது அனுதாபமும், உண்மையை எடுத்துரைக்க அச்சமற்ற நெஞ்சுறுதியையும் கொண்ட ஒரு வேட்பாளராக பற்றிக் பிறவுன் விளங்குகிறார். பற்றிக் பிறவுன் ஒரு வல்லமைமிக்க அரசியல் அமைப்பாளர் ஆவார், மேலும் கியூபெக்கின் பில் 21 க்கு அவர் பகிரங்க எதிர்ப்பின் மூலம் மத சுதந்திரத்தின் பாதுகாவலராக தன்னை வடிவமைத்துக் கொண்டார். “வேறு எந்த அரசியல்வாதிக்கும் வெளியே வந்து தமிழர் நியாhத்தைச் சொல்ல இல்லாத தைரியம் இவரிடம் இருக்கிறது. இதனால் உண்மையில் அவரை அரசியல் ரீதியாக அழித்துவிடக்கூடிய ஒரு நிலைப்பாட்டையே இவர் எடுத்துள்ளார். அத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே “தமிழ் சமூகத்தின்  மத்தியில் தமிழர்களின் தம்மினம் சார்ந்த கேள்விகளுக்கு இவர் பதிலளித்துள்ளார். 

பற்றிக் பிறவுன்; ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள தமிழ்ச் சமூகத்தைச் சந்தித்த பொழுது “பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைச்சட்டத்தை நீக்குவேன் என்றும், கனடாவிற்கு வரவிரும்பும் எந்தவொரு குடும்பத்திற்கும் கதவைத் திறப்பேன் என்றும் கூறினார். மேலும் கூறுகையில் “நான் 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த பிரச்சினையில் பணியாற்றி வருகிறேன். கனடாவும் உலக சமூகமும் தமிழ் இனப்படுகொலையில் தவறான பக்கத்தை எடுத்தது" என்றும், இலங்கை அரசாங்கம் “கொடூரமான போர்க்குற்றங்களை இழைத்துள்ளது" எனவும் தெரிவித்தார். 

ஒரு பிரதமர் என்ற முறையில் கடந்தகாலங்களில் தமிழர் தொடர்பான விடயங்களில் கனடாவின் நிலைப்பாட்டிற்காக மன்னிப்புக் கேட்பேன் என்றும் கூறினார். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் சமூகத்தின் பாதுகாப்புக்கான ஒரே வழி அவர்களது தாயக பூமியில் அவர்களது தன்னாட்சியுரிமை மட்டுமே அதாவது தமிழீழம் மட்டுமே என்ற தனது நம்பிக்கையும் அவர் எடுத்தியம்பினார். 

பற்றிக் பிறவுன் அவர்களின் தமிழ் சமூகத்தின் மீதான அனுதாபம், மற்றும் உண்மையில் அவர்களுக்கு நடந்த அநீதிக்காக அவர் குரல் கொடுப்பதனாலும், கனடாவிலுள்ள இலங்கைத் தூதராலயம் அவரை “புலி” என (வெள்ளைப் புலி) என முத்திரை குத்தியதும் கவனத்திற்குரியது. 

2006 இல் கனடா தமிழ்ப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டபோது ஸ்டீபன் ஹார்ப்பரின் பழமைவாத அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்தத்தடை 2018 இல் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. 

“யுத்தம் முடிவடைந்து 13  வருடங்களாகியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் தொடரும் இத்தடையின் காரணமாக அதிகமான தமிழ் கனடியர்கள் தொடர்ந்து களங்கத்திற்கு ஆளாகின்றனர் என்றும், இது “குடும்ப மறு இணைப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை தேவையற்ற முறையில் பாதிக்கிறது." என்றும், கனடா 2017 இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி, “தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இனி புலிகள் இல்லை” என்றும் பற்றிக் பிறவுன் தெரிவித்துள்ளார். 

“தமிழ் புலிகளின் தடையை நீக்க சபதம்” எடுத்த பற்றிக் பிறவுன் எனும் கட்டுரை கடந்த செவ்வாய்; ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில்; தன்னை விடுதலைப் புலி என்று இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மக்களிடம் கூறுகிறது. உண்மையில், அவ்வாறு கூறுவது இலங்கை உயர் கமிஷன் என்றும் பற்றிக் பிறவுன் வீடியோவில் கூறுவதை அக்கட்டுரை குறிப்பிடுகிறது. “நான் தடையை நீக்கப் போகிறேன். தடையை ரத்து செய்யப் போகிறேன். நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். இனப்படுகொலை செய்யும் அரசாங்கத்திற்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அவர்களது அட்டூழியங்கள் அருவருப்பானது என்றும், அவர்கள்  போர்க் குற்றவாளிகள் என்றும் இந்த இனப்படுகொலையில் இருந்து மக்களைப் பாதுகாக்கப் போரடியவர்களே புலிகள் என்றும்  “அதனால்தான் அவர்களுக்கு, தமிழர்களுக்கு பொது மன்னிப்பு தேவை. தமிழர்கள் எப்படி ஒரே மாதிரியாக மாறினார்கள் என்பது கொடுமையானது. மேலும் புலி பயங்கரவாதத்தின் சின்னமாக இருப்பதை விட, புலி என்பது போர்க்குற்றம் இழைக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தற்காப்புக்கான குறியீடாகும் என்பது எனது கருத்து.” என்றும் பற்றிக் பிறவுன் கூறியதைச் சுட்டிக் காட்டியுள்ளார் அக்கட்டுரையாளர். 

உக்ரேனிய அகதிகளை விரைவாகக் கண்காணிக்க கனேடிய அரசாங்கம் "எவ்வளவு விரைவாக" நகர்ந்துள்ளது என்று குறிப்பிடும் பிறவுன்;, "கனடா உக்ரைனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், விருப்பம் உள்ள இடத்தில் ஒரு வழி இருக்கிறது. “எனவே எனது இலக்கானது, மீண்டும் ஒன்றிணைய விரும்பும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தையும், இந்த மன்னிப்பின் ஒரு பகுதியாக கனடாவுக்கு வர விரும்பும் எந்தவொரு தமிழ்க் குடும்பத்தையும் நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கப் போகிறோம்  என்று கூறியுள்ளார். 

இந்த வீடியோ பிறவுனின் கீச்சக(Twitter) கணக்கிலோ அல்லது அவரது கொள்கை, தலைமை இணைய தளத்திலோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பேசும் பொழுது தனக்கு இலங்கைத் தமிழர்கள் பற்றிய விடயங்களை, நியாயங்களை அதன் உண்மைத் தன்மையை கண்ணீருடன் எடுத்துரைத்த ரஞ்சி சுரேஸ்குமார் அவர்களைப் பற்றியும் எடுத்தியம்பினார். இதுவே அவரது நேர்மையின் ஓர் அறிகுறியாக நான் கண்டேன். ஏனெனில் இதுபற்றி அதே சகோதரி என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருந்தார். எந்தவொரு அரசியல்வாதியும் இப்படி வெளிப்படையாக பேசியதை நான் அறியேன்.

பற்றிக் பிரவுண் அவர்களின் வெளிப்டையான இப்போக்குக் கண்டு பெருமளவில தமிழர்கள்,  அவரை  ஆதரித்து அங்கத்தவராகி அணிதிரளத் தொடங்கிவிட்டனர். பற்றிக்; பிறவுன்; கன்சவேர்டிவ் கட்சியின் தலைமக்கு வரும் பட்சத்தில் “தமிழர்களுக்கான நியாயம் பிறக்கும்” என பெரும்பான்மையான தமிழர்கள் நம்புகிறார்கள். நமக்கு நடந்த அநீதிக்கு எதிராக தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றிச் சுயநலமாகச் சிந்திக்காமல் வெளிப்டையாகப் பேசுகின்ற ஒரு மனிதரை எப்பொழுதும் உண்மையுள்ள தமிழர்கள் ஆதரிப்பார்கள். தமிழர்களுக்கு நடந்ததும், இன்றும் தமிழர்கள் முகங்கொடுத்துக் கொண்டிருப்பதும் திட்டமிட்ட இனவழிப்பைத்தான் என்பதைனை ஏற்று, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை எடுப்பதற்கும், தமிழர்களுக்கான பரிகார நீதிக்காக குரல் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே தமிழர்கள் வாக்கு என்பதில் கனடாவாழ் தமிழர்கள் உறுதியான முடிவு கொண்டு “ஒன்றாகு தமிழா! வென்றாகுவோம்!”

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image