Home » புதிய அரசியல் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறார் திலித்

புதிய அரசியல் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறார் திலித்

Source

பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரமொன்றின் தேவை குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

மகிழ்ச்சியான உலகை உருவாக்கும் தொழில் முனைவோர் அரசாங்கத்தை கட்டியெழுப்பும் இந்த மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (17)நடைபெற்றது.

கடந்த சில மாதங்களில் பல மாவட்ட மாநாடுகள் நடைபெற்ற போதிலும் , இந்த மாநாட்டுக்கு அதிக சனத்திரள் காணப்பட்டது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய திலித் ஜயவீர மேலும் கூறியதாவது

“நான் அரசியலுக்கு வர எதிர்பார்த்தவன் அல்ல . தயக்கத்துடன் ஆனால் விருப்பத்துடன், காலகாலமாக அரசியல் ஓட்டத்தைப் பொறுத்துநாங்கள் வெவ்வேறு நபர்களை ஆதரித்தோம். ஆனால் இப்போது உங்களுக்காக, நாட்டிற்காக, இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் முன்பு பல தரப்புகளை ஆதரித்தோம். அது வேறொன்றுமில்லை. என்றாவது ஒரு நாள் இந்த அன்பான இலங்கையை கட்டியெழுப்பலாம், வளர்ந்த நாடாக மாற்றலாம் என்ற ஆசைதான் அது . ஆனால் இலங்கையில் தீர்க்கமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது மவ்பிம ஜனதா கட்சி மற்றும் அந்த அமைப்பின் இளையோர் மூத்த தலைவர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

இந்த நாடு இப்போது மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்கிறோம். மிகவும் கடினம். 75 வருடங்களாக இந்த நாடு கொள்கை இல்லாத அரசியல் செய்து வருகிறது என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. உங்கள் அனைவரின் வாழ்விலும் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிகரமான மாற்றம் இந்த நாட்டிற்கு தேவை. நாங்கள் செய்த முக்கிய தவறு என்னவென்றால், நாங்கள் எப்போதும் மற்றொரு அரசாங்கத்தை கவிழ்க்க புதிய அரசாங்கங்களை கொண்டு வந்தோம். அல்லது வேறொரு அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எமது பணியாக இருந்தது. ஆனால் உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளும் பயன்படுத்தும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்துடன் நாங்கள் வருகிறோம்.

அது நாட்டையும் உங்களையும் முன்னோக்கி நகர்த்தும் வாழ்க்கையை உருவாக்குகிறது என்ற கருத்துடன் நாங்கள் வருகிறோம். இந்த நாடு பின்னடைந்து நிற்கும் நாடு அல்ல. இது ஒரு விஞ்ஞான மற்றும் நடைமுறை திட்டமாகும், இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்ற நிலையை இது விரைவாக மேம்படுத்தும். இந்த நாட்டின் அனைத்து படைப்பாற்றல் மிக்கவர்களும் ஒன்றிணைந்து முன்னேறவேண்டும்.எங்களிடம் எப்போதும் இருந்த தன்னம்பிக்கை , தைரியம் மற்றும் படைப்பாற்றலுடன் முன்னேற்றத்திற்கான பயணத்தை இலங்கையர்களாகிய நாங்கள் மேற்கொள்ள வேண்டும். துக்கம் அனுசரிக்க புலம்புவதற்காக நாங்கள் மக்களை ஒன்று சேர்க்கவில்லை. புலம்பல்களை கேட்கவோ அல்லது சேற்றை சுவைக்கவோ மக்கள் நம்மைச் சுற்றி கூடுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் திகதிகளுடன் திட்டமிடப்பட்ட அட்டவணை. அந்த நடைமுறையில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறீர்கள். கொழும்பில் உள்ளவர்களைப் போன்று, நிற, கட்சி, மத, இன வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்புகிறோம். மறுக்க முடியாத வெற்றியுடன் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே வகையான மற்றும் கெளரவமான தீர்வு இதுதான் என்பதை இன்றைய இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது. சரியான நேரத்தில் அதை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது முன்னேறக் கூடிய நாடு, எழுச்சி பெறவும், முன்னின்று நடத்தவும் காத்திருக்கும் இளம் தலைமுறையைக் கொண்ட நாடு. இவர்கள் அனைவருக்கும் தலைமை தாங்கி நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு நாம் தயாராக உள்ளோம். சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது எந்த நிறத்தில் யார் வந்தாலும், வெறுப்பை விதைத்தால், இந்த நாடு பின்னோக்கிச் செல்லும். வெறுப்பை விதைக்கும் அனைவரையும் நேசிக்கும் கட்சி நாங்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

நாங்கள் தூய்மையான இதயம் கொண்ட கட்சி. வெறுப்பு அரசியல் செய்து இந்த நாட்டை அழிப்பதை நிறுத்துங்கள். உங்கள் வெறுப்புக்கு அன்புடன் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டின் மவ்பிம ஜனதா கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இந்த நாட்டின் அப்பாவி மக்களை ஏமாற்றிய கட்சிகள், உங்கள் கண்ணீரை ஒரு சதத்திற்கு கூட கணக்கில் எண்ணாத கட்சிகள், அதனால் தான் உங்களுக்காக சரியான நிலையில் அவர்கள் நிற்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை அவர்கள் ஏற்படுத்தவில்லை. எங்கள் அணுகுமுறையைப் பாருங்கள்.நாங்கள் இந்த பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் அர்த்தம் இந்த இருநூற்றி இருபத்தைந்தும் வேண்டாம் என்பதல்ல. அவர்கள் சேரக்கூடிய இடம் இருந்தால், எங்கள் கொள்கையுடன் உடன்பட்டால் அவர்கள் எங்களது வரிசையில் சேரலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் எப்படி ஒன்றாக பயணிக்கலாம் என்று பார்ப்போம். நாம் மற்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கிறோம் என்பதல்ல நண்பர்களே.

எங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. இத்திட்டம் நமது தாய்நாட்டை மாற்றும் திட்டமாகும். பின்னர் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் நேர்மையான இதயத்துடன் மட்டுமே அவர்கள் எங்களுடன் சேர வேண்டும். அரகலய போராட்டத்தின் போது எங்களுடன் இருக்கும் இளைஞர்கள், வலிமையான, படைப்பாற்றல் மிக்க, துணிச்சலான பலரை நான் அறிந்துகொண்டேன். நான் நேர்மையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பற்றி பேசுகிறேன், அரசியல் காரணங்களுக்காக அங்கு வந்தவர்களை அல்ல. சிகப்பு, இளஞ்சிவப்பு கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக மக்கள் நலமற்ற சமூக ஊடக கலாச்சாரத்தில் இருந்து வெளியே வந்து, மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்கவும் பிரார்த்தனை செய்வோம்.இல்லையெனில் எதிர்மறை சிந்தனை மூலமும் மக்களின் மரணத்தை விரும்பி கருத்துகளை வெளியிடுவதன் மூலமும் இந்த இளைஞர்களுக்கு கொண்டு செல்லப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.அது இந்த நாடு முன்னேறுவதற்கான வழி அல்ல.தனிப்பட்ட முறையில் திலித் ஜயவீரவும் மவ்பிம ஜனதா கட்சியும் நாட்டு மக்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கும் குழு அல்ல. எனவே நீங்கள் எங்களை நம்பலாம். இந்த இலங்கை அரசியலில் 75 வருடங்களாக தொடர்ந்து சீரழிக்கப்பட்ட அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இராஜதந்திர அதிகாரி பாலித கொஹோன, சர்வதேச மோட்டார் பந்தயச் சம்பியனான டிலந்த மாலகமுவ, ஓட்ட பந்தயச் சம்பியனான ஷெஹான் அம்பேபிட்டிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image