பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்கள் பட்டினியில் இல்லையென பிரதமர் தெரிவிப்பு
எந்தவித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாத காணிகளை, உணவு உற்பத்தி மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் நோக்கில், இளைஞர் யுவதிகள் மற்றும் விவசாய முயற்சியாளர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இவ்வாறு பயன்படுத்தப்படாத காணிகளில் பல்வேறு உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு உட்பட ஏனைய இதர நிறுவனங்களின் கீழ் உள்ள பெரும் அளவிலான காணிகள் எதுவித பயன்பாடும் இன்றி காணப்படுவது தெரிய வந்துள்ளது.
இவற்றை கருத்திற் கொண்டு, அத்தகைய காணிகளை அடையாளம் கண்டு அவற்றை பயிர்ச்செய்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், கந்தளாய் மற்றும் மொனராகல பிரதேசங்களில் 20 ஆயிரம் ஏக்கர் காணி இரண்டு வருடங்களுக்கு வரி அறவீட்டின் அடிப்படையில் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்கள் பட்டினியில் இல்லையென பிரதமர் சுட்டிக்காட்டினார்.