மத்திய செனகலில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் பலி
மத்திய செனகலில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு அதிபர் மெக்கி சோல் (ஆயஉமல ளுயடட) கவலை தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அங்கு மூன்று நாட்கள் துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்கள் தொடர்பில் அமைச்சரவை ஆலோசனை சபையொன்று அமைக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.