Home » முக்கிய செய்திகளின் சுருக்கம் 04.11.2023

முக்கிய செய்திகளின் சுருக்கம் 04.11.2023

Source

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஸா பிரச்சினையை ஐ.நா ஒரு விதத்தில் நடத்தும் அதே வேளையில் இலங்கையை வேறு விதமாக நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள UNHRC அமர்வுகளில் சுத்தமான கரங்களுடன் வருமாறு ஐக்கிய நாடுகளை வலியுறுத்துகிறார். நியாயம் இல்லை என்றால் இலங்கை ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்.

2. 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.70 முதல் 90 வரை அதிகரிக்கப்படும் என லிட்ரோ காஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

3. பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்னவுக்கு மேலும் 3 வார கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

4. இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் ஊழியர்களுக்கு மாதாந்தம் 120,000 அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கப்படுவதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டிற்கு USD 30,000, ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனவுக்கு USD 20,000 மற்றும் உதவிப் பயிற்சியாளர் நவீத் நவாஸுக்கு USD 14,000 உட்பட்டது என்கிறார்.

5. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தை குறித்து தாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக TMTK தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான CV விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார்.

6. VAT வரியை 18% ஆக அதிகரிப்பதற்கான பிரேரணையின் மூலம் அரசாங்கம் பொருளாதாரத்தை “சுருக்கிவிட்டதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார். இது செலவு மற்றும் முதலீடுகளை குறைக்கும் என்று கூறுகிறார். இலங்கையின் பிரச்சினையை பொருளாதார வளர்ச்சியின் மூலமே தீர்க்க முடியும் என்றும் பொருளாதார சுருக்கத்தின் மூலம் அல்ல என்றும் கூறுகிறார்.

7. மோசடியான பிரமிட் திட்டத்திற்காக “OnmaxDT” இன் 5 இயக்குநர்களை நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

8. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் வெல்லவாய பகுதியில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானத்தில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

9. SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கூறுகையில், இலங்கை ஐசிசி உறுப்புரிமையை இழந்தாலும், கிரிக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரையும் விளையாட்டுத்துறை அமைச்சர் அகற்ற வேண்டும் என்றார்.

10. 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய தோல்விக்குப் பிறகு, பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களிடமிருந்து அவசர விளக்கத்தை இலங்கை கிரிக்கெட் கோருகிறது. நடப்பு உலகக் கோப்பை 2023 இன் போது அணியின் செயல்பாடு குறித்து ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image