Home » முன்னையிட்ட “தீ”

முன்னையிட்ட “தீ”

Source

-----------------------------------------------------------------------------------------   முகுந்தமுரளி

முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே என்ற பட்டினத்தாரின் வரிகள் போலச் சிங்களபௌத்த பேரினவாதிகள் விதைத்த இனத்துவேச சிந்தனைகள்; பௌத்த அறத்தை அழித்ததுமட்டுமல்லாது, சனநாயக விழுமியங்களின் அரசியல் அறத்தையும் மீறிய கொடிய செயல்களாயும் விளங்கின. அன்றைய சிங்கள அரசியல் தலைவர்கள் முன்னையிட்ட தீ பௌத்த தர்மத்தையே கடைப்பிடிக்காத பலஇனவெறி கொண்ட சிங்கள பௌத்த அரக்கர்களையே வளர்த்தெடுத்து, கண் மூடித்தனமாக காட்டுத்தீயாகப் பரவியது. 

         இத்தகைய காட்டுத்தீயிடம் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போராடிய தமிழ் தியாக மறவர்களையும் “பயங்கரவாதிகள்” எனச்சித்தரித்து, உலக வல்லாதிக்க அரக்கர்கள் பௌத்த சிங்கள பேரினவாதத் தீ வெற்றிகொள்ள நட்புறவுகளாய் கரங்கோர்த்தன. ஒன்றுக்கு ஒன்று பகமைகொண்ட நாடுகள் கூட இவ்விடயத்தில் ஒன்றிணைந்து தர்மத்திற்காக அறத்துடன் போராடிய மறவர்களையும், மக்களையும் அதர்மமாக, யுத்தநெறிமுறைகளையும் மீறி கொன்றொழித்து தம்மை சனநாயகத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டன. உலகநாடுகளால் தடைசெய்யப் பட்ட விசவாயுத் தாக்குதல், பொசுபரசுத் தாக்குதல், கொத்தணிக் குண்டுகள்; வீச்சு என்று அனைத்து சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறிச் செயற்பட்டன சர்வதேச அரச பயங்கரவாதிகளின் ஆதரவில் நடந்த இனவழிப்புத் தாக்குதல்.

ஆண்ட தமிழினம் மீண்டும் தலைநிமிர்ந்தால், அதுவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் தங்கள் வல்லாதிக்கக் கனவுகள் நிர்மூலமாகிவிடும் என்பதனாலேயே எதிரிகள் யாவரும் ஒன்றிசைந்து இனப்படுகொலைக்கு முன்று கொடுத்து நின்று நாடகமாடினர். அதன் மூலம் தமிழர்களை அரசியல் அநாதைகளாக்கிய இராணுவ வெற்றி ஒன்றை மட்டுமே தனியாகப் பெற்றுக்கொண்டனர். 

ஆம், அதர்மத்தின் வெற்றி வெறும் இராணுவ வெற்றியாக தனியாகவே வந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து அவர்கள் மேல் அரசியல், பொருளாதார தோல்விகள் படையெடுக்கத் தொடங்கின. அதிலும் குறிப்பாக இலங்கையில் நல்லிணக்க ஆட்சி கூட அறங்காக்கத் தவறியது. திட்டமிட்ட இன அழிப்பு நிகழ்ச்சி நிரல்களை அவர்களும் மறைமுகமாக அரங்கேற்றினர். முன்னையிட்ட தீ மூன்று இராச்சியங்களையும் ஒற்றை ஆட்சிக்குள் கட்டிப்போட்டு முப்புரத்திலும் பற்றி எரிந்தது, அதர்ம வெற்றி தந்த ஆணவத்தில் அறிவிழந்து ஆட்சியாளர்கள் பின்னர் பற்றவைத்த தீ மெல்ல மெல்ல அறத்தின் தீயாக அனுமன் வைத்த தீயாக இன்று தென்னிலங்கையை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்தத் தர்மத் தீ தென்னிலங்கையை மட்டுமல்ல  இன்று தமிழினத்தை அரசியல் அநாதைகளாக்க உடந்தையாக இருந்த, 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தை பேரழிவை நிகழ்த்திய அத்தனை சர்வதேச நாடுகளும், பெருந்தொற்று  காரணமாக 2020 முதல் வரலாறுகாணத முடக்கத்தையும் பேரழிவுகளையும் சந்தித்துக் கொன்றிருக்கின்றன. இந்தத் தொற்றுநோய் எங்கு முதலில் பரவத்தொடங்கியதோ அந்தச் சீனாவில் தற்பொழுது நான்காவது அலையாக தாக்கத் தொடங்கியுள்ளது. இது சங்காய் நகரத்தில் மூன்றுகோடி மக்களையும் நாலாயிரம் இராணுவ வீரர்களைக் கொண்டு முடக்கியுள்ளது. புதிய ஹைபிறைற் கொரோணா வைரசு திரிபுகள் தாக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் பெருந்திரட்சியாக மக்கள் போராட்டங்கள் வெடித்திருக்கின்ற பாகிஸ்தான், இலங்கையில் தற்பொழுது இந்தத் தொற்றுக்களைப் பற்றிய பேச்சுக்களை கேட்கமுடியாது மறைந்து போயுள்ளன. 

அதைவிட யுத்தங்கள் குறிப்பாக ரஷ்ய- யுக்ரைன் போர் மிகப்பெரும் சவாலாக விளங்குகின்றன. இலங்கையின் இனப்படுகொலைக்கு உதவி புரிந்த யுக்ரைன் சிதறுண்டு கொண்டிருக்கிறது. நட்புக்கரம் கோர்த்த நாடுகள் பகைகொண்டு முரண்கின்றன.

 இந்நிலை தொடருமாயின் 2022இல் மூன்றாம் உலகப்போர் என்பது தீர்க்கதரிசி நோத்திரடாமஸ் கூறியதுபோல் நடைபெறப்போகிறதா? 2022 இல் உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும் அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் உலகின் வெப்பதட்ப நிலை மாறும். இதனால் பிரமாண்டமான பனிப்பாறைகள் முற்றிலும் உருகும், இதனால் உலகில் கடலிலுள்ள நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் உலகிலுள்ள பல சிறிய தீவுகளும், சிறியநாடுகளும் நீரில் மூழ்கும். கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணம் அடைவார்கள். எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறுநோய்கள் ஏற்படும். இவ்வேளையில் ஏற்படப்போகும் பெரும்புயலின் காரணமாக விவசாயம் அழிந்துபோக உலகமே பஞ்சத்தில் மூழ்குமாம். இவரின் கணிப்பின்படி 2022 மிகவும் அழிவுகரமானதாக இருக்குமாம். பலநாடுகளுக்கிடையே போர்நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும். அந்த நோரத்தில் ஏற்படும் இயற்கையின் பெரும்மாற்றத்தின் காரணமாக உலகமே மூன்று நாட்களுக்கு பெரும் இருளினுள் மூழ்கும். அப்பொழுது உலகநாடுகளிற்கு இடையில் நடக்கும் போர் நின்றுவிடும். மூன்றுநாட்களிற்குப் பிறகு உலகம் வெளிச்சத்தைக் காணும் பொழுது நவீன யுகம் முடிந்துபோய் மனித இனம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் என்று அவரது தீர்க்கதரிசனம் தெரிவித்துள்ளதாம் என மக்களை மேலும் பீதிமூட்டும் டிஜிற்றல் சமூக ஊடகங்கள் ஒருபுறம்.  தாறுமாறாக புற்றீசல்போல யூரியுப்பில் வருமானம் பெருக்க வாய்ஜாலம் புரியும் அரசியல் ஞானம் குறைந்த அரைகுறை அரசியல் ஆய்வாளர்கள் ஒருபுறம், உலக அரசியல் முதல் உள்நாட்டு அரசியல் வரை அளப்பறைகள் ஒருபுறமும், ஊடக தர்மத்தை மீறி தங்கள் சுயலாபம் கருதி செயற்படும் ஊடகங்கள் ஒருபுறமுhக உண்மைகளை சாமானியர்கள் அறிந்து கொள்ள முடியா மாயவலையை பின்னுகின்றன.  

யாரையும் பழிவாங்க நினைக்காதே, உன்னை ஏமாற்றியவர்கள் தங்கள் கர்மவினையை அடைந்தே தீருவர். நீ அதிஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண்முன்னே நிகழும் - என்ற கௌதம புத்தரின் வார்த்தைகள் இன்று ஈழத் தமிழர்களின் முன்னால் மெய்ப்பட்டுப் போய் நிற்கின்றன. 

இந்தவேளையினிலே இலங்கையில் நடக்கும் போராட்டங்களிற்கு தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்மக்களை இழுப்பதன் மூலம் மிகப்பெரும் அரசியல் சதிகளைச் செய்துவருகின்றனர். சுமந்திரன், சாணக்கியன் புரியாத புதிர்களாகவே செயற்பட்டு வருகிறனர். இத்தகைய போராட்டங்களிற்கு தமிழ் மக்களை சதிகரமாக அணிதிரட்டுகின்றனர். 

டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வியாழேந்திரன், பிள்ளையான், கருணா  போன்றவர்கள் தமிழர்களைக் கொன்ற படுகொலையாளிகளுடன் இணைந்து தலைகுனிந்து வணக்கம் போட்டு தமிழினத்தை தலைநிமிரவிடாமல் தங்கள் சுயலாப அரசியலில் குளிர்காய்கின்றனர்.  

      தற்போதைய போராட்டங்கள் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவரப்போவதில்லை. ஏனெனில் ராஜபக்ச குடும்ப அரசாங்கம் செய்கின்ற மாயநாடகமானது,  ஒரு புதிய அரசவையை அமைத்து தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் அல்லாத நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து மேலும் நிகழப்போகின்ற நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்குமான அவதூறுகளில் இருந்து தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்றும் அணுகுமுறையாகும். அவர்கள் ஒரு பொழுதும் ஆட்சிமாற்றத்திற்கு இடமளிக்கப்போவதுமில்லை. அதேவேளை அவர்கள் இராணுவ ஆட்சியை அமைப்பதற்கும் இது சரியான தருணமும் இல்லை. இருப்பினும் அவர்கள் வழிமொழியும் ஆலோசனைகள் தலைவலிக்கு தலையணையை மாற்றி வைப்பதன் மூலம் தலைவலியைத் தீர்க்க முடியும் என்பதுபோல பயனற்ற செயலாகும். இவர்களது புதிய அரசவையால்; நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்திடவும் முடியாது. இலங்கையில் பற்றி எரியும் தீயை அணைக்க பயன்படப்போவதுமில்லை.  இம்முயற்சிகளுக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் எதிர்ப்பதுபோல் எதிர்த்து ஆதரவுநாடகம் ஆடுகின்றனர்.  நாளை இந்த புதிய அரசவையில் இவர்கள் அமைச்சர்களாக அரசவையமர்ந்தாலும் ஆச்சரியம் இல்லை. 

இந்தப் பூமிப்பந்தில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, பாரிய மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து,  தமிழர்களை படுகொலைசெய்து, தமிழர்களின் உறுதிவாய்ந்த தலைமையையும், மக்களின் விடுதலைக்காய் போராடிய தியாக விடுதலைப் போராளிகளையும் அழித்து  ஈழத் தமிழர்களை அரசியல் அநாதையாக்கி அதர்மம் புரிந்த அத்தனை நாடுகளும், தாங்கள் செய்த அதர்மத்தின் அனர்த்தனங்கண்டு, தர்மம் சீற்றம் கொண்டு தங்கள் மேல் மீளப்பற்றுகின்றது என்பதனை உணரவேண்டும். அவ்வாறு உணரும் பட்சத்தில் தாம்செய்த அநீதிகளுக்கு பரிகார நீதியாக  தமிழர்களின் உரிமைகளை, அவர்கள் தாயக பூமியை அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும்.

 கடந்த 74 ஆண்டுகளாக சிங்களப் பேரினவாதம் வளர்த்த தீயான தமிழின அழிப்புக்கு தமிழீழக்குடியரசு ஒன்றே ஒற்றைத்தீர்வு. தமிழரின் இறைமையை காப்பாற்றும் வலிமையும் திறனும் தமிழீழக்குடியரசுக்கு மட்டுமே உண்டு. தமிழர்களின் தன்னாட்சி உரிமை ஒன்றுமட்டுமே திட்டமிட்ட இனப் அழிப்பிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றும். உலகில் அமைதியும், சமாதானமும் நிலவும்! அவ்வாறு இல்லையேல் ஆளவும் வழியில்லாமல், வாழவும் வழியில்லாமல் அல்லல்படும் தமிழினத்தின் அறச் சாபம் அதர்ம உலகைச் சிதறுண்டு போகவைக்கும். அரசியல் அறத்தில் (பாகவத) இறை தர்மத்தை உணராது மதிமறந்து செயற்படும் பாரததேசமும் இதற்கு விதிவிலக்கல்ல. வீண்பழியும், கர்மவினையும் காலத்தின் பதிலாக காந்தி தேசத்தையும் கலங்கடிக்கும். 

What’s your Reaction?
1
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image