Home » முழுமையான 13 ஆவது திருத்தம்!

முழுமையான 13 ஆவது திருத்தம்!

Source

அதுவே மஹிந்தவின் நிலைப்பாடாம் அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், அதிலுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தனித்தனியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்பவேண்டாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
‘அரசமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த நிலைப்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுதியாகவுள்ளது. எனவே, 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் தனித்தனியே முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்ப வேண்டாம்’ என்றார். 

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image