லெபனான்; வெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இஸ்ரேல்
லெபனான்; இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இஸ்ரேலின் மொஸாட் உளவுப் பிரிவு உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இறக்குமதி செய்த தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளில் மொஸாட் உளவுப் பிரிவு வெடிபொருட்களை மறைத்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்வான் நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இந்தக் கருவிகளைக் கொள்வனவு செய்துள்ளது. குறி;த்த கருவிகள் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் லெபனானுக்குக் கொண்டுவரப்பட்டதாக லெபனானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருவிகள் தயாரிக்கப்படும்போது மொஸாட் உளவுப் பிரிவு இவ்வாறான சூழ்ச்சியினைச் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். கருவிகளில் சிறியளவில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்தது.
அதைக் கண்டுபிடிப்பது சிரமம் என்றும் அவர் தெரிவித்தார். கருவிகளுக்கு குறிப்பிட்ட சமிக்ஞை சென்றதும் அவை வெடித்துள்ளதாகவும் லெபனானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.