விமானப் பயணத்தின் போது சிக்கனத்தைக் கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தமது அமைச்சர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். குறிப்பாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் விமானங்களை பயன்படுத்துமாறு அவர் கேட்டுள்ளார். அதேபோல், ஆடம்பர கார்களையும், தமது சம்பளத்தையும் தியாகம் செய்யுமாறு அவர் கேட்டுள்ளார். இதன்மூலம், வருடத்திற்கு 766 மில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் சிக்கன திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது