Home » ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை, ரிதீமாலியத்த விவசாய குடும்பங்களை கல்வி மூலம் வலுவூட்டும் C. W. Mackie PLC

Source

இலங்கையின் பல்துறை வியாபார நிறுவனமும், Scan Jumbo Peanuts பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமுமான C.W. Mackie PLC நிறுவனம், அதன் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பான விவசாய குடும்பங்களை ஆதரிக்க தனது இரண்டாவது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தை ஆரமபித்துள்ளது. ‘ஸ்கேன் தரு திரிய’ (Scan Daru Diriya) எனும் இத்திட்டத்தின் மூலம், மஹியங்கனை மாவட்டத்தின் ரிதீமாலியத்த பகுதியிலுள்ள 75 விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியானது, இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரிவு முகாமையாளர் அலுவலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இவ்வுதவியை பெறும் மாணவர்களின் பெற்றோர், இலங்கையின் நிலக்கடலை (peanut) உற்பத்தி துறையின் முக்கிய பங்காளிகள் ஆவார்கள். இந்த சிறுவர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் அவர்களது சுகவாழ்வை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டம் தொடர்பாக, C.W. Mackie PLC நிறுவனத்தின் பணிப்பாளரும், குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான மங்கள பெரேரா தெரிவிக்கையில், “C. W. Mackie PLC ஆகிய நாம் வெறுமனே வியாபார வெற்றியை மட்டுமல்லாது, நிலைபேறான வளர்ச்சி மற்றும் விவசாய வலுவூட்டலுக்காக உறுதிபூண்டுள்ளோம். உள்ளூர் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், ஏற்றுமதிகளின் மூலம் உலக சந்தையில் போட்டித்திறனை மேம்படுத்துவதும், விவசாய சமூகத்தை மேம்படுத்துவதும் எமது நோக்கமாகும். விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்திக்கான சிறந்த விலையை வழங்குவதன் மூலம் முழுமையான விவசாய சமூகத்தையும் மேம்படுத்த விரும்புகிறோம். சந்தையில் முன்னணியில் உள்ள Scan Jumbo Peanuts ஆகிய நாம், விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கும், விவசாய குடும்பங்களில் உள்ள சிறுவர்களின் கல்விக்கும் ஆதரவு வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். இது விவசாயம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீதான நீடித்த சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எமது பரந்த முயற்சியின் ஒரு அங்கமாகும்.” என்றார்.

இந்த சமூக பொறுப்புத் திட்டமானது, C.W. Mackie PLC நிறுவனம் தமது விநியோகச் சங்கிலியில் உள்ளவர்களுக்கு உதவும் சமூக மேம்பாடு தொடர்பான அதன் நீண்டகால உந்துதலுக்கு அமைய முன்னெடுக்கபடுகிறது. ஹொரணையில் அமைந்துள்ள நிறுவனத்தின் உயர் தொழில்நுட்ப ஸ்னக் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியமை உள்ளிட்ட ப்வேறு முக்கிய முதலீடுகளை இந்நிறுவனம் விவசாயத் துறையில் மேற்கொண்டுள்ளது. இந்த நவீன தொழிற்சாலையானது உயர் தரத்திலான ஜம்போ பீனட் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதோடு மாத்திரமல்லாது, மொத்த தேசிய உற்பத்திக்கு (GDP) வலுவை வழங்குவதுடன், உள்நாட்டு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இலங்கைச் சந்தையில் 70% இற்கும் அதிக பங்கைக் கொண்டுள்ள Scan Jumbo Peanuts, அதன் தரம், சுகாதாரத்தன்மை மற்றும் பெரிய அளவிலான நிலக்கடலைகளைத் தெரிவு செய்யும் நடைமுறைகளுக்காக புகழ்பெற்று விளங்குகின்றது. Scan வர்த்தகநாமத்தின் கீழ் சுத்தமாக பதப்படுத்தப்படும் இவ்வகை நிலக்கடலைகள், இலங்கையின் அனைத்து வயதினர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதன் மூலம், சந்தையில் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றது

ஈடுகொடுக்கும் தன்மை மற்றும் புத்தாக்கத்தை பேணி, 124 வருட வரலாற்றின் உயர் கலாசாரத்தை நிறுவனம் கொண்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என பல்வேறு துறைகளில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. அதிகம் நுகரப்படும் பொருட்கள் (FMCG) துறையில் முக்கிய பங்கு வகிக்கும் அதன் ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவானது, பாரம்பரிய மற்றும் நவீன வர்த்தகம் முதல் உணவுச் சேவை மற்றும் நிறுவன சந்தைகள் வரை பரந்த அளவிலான நுகர்வோரை அடைய சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக வழிகளைப் பயன்படுத்துகிறது.

இந்நிறுவனத்தின் FMCG உற்பத்திகள் பட்டியலில், Sunquick, Scan Jumbo Peanuts, Scan Cassava Chips, Scan போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், KVC உற்பத்திகள் (பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகள்), கொட்டகல கஹட்ட தேநீர், Delish, Star வர்த்தகநாம நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் ஆகியன அடங்குகின்றன.

இந்த வர்த்தகநாமங்கள் இலங்கை நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ளதோடு, அந்தந்த பிரிவுகளில் சந்தையில் முன்னணியில் திகழ்கின்றன.

‘ஸ்கேன் தரு திரிய’ திட்டத்தின் மூலம், விவசாயக் குடும்பங்களிலுள்ள வளர்ந்து வரும் தலைமுறையினரின் மேம்பாட்டை உறுதிப்படுத்தி, ஒரு பொறுப்பான வணிக நிறுவனமாக திகழ்வதை அது உறுதிப்படுத்துகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image