சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட BMW ரக அதிசொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு இன்று (25) காலை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் பின்வரும் தண்டனைகளை விதித்துள்ளார்.
- முதலாவது குற்றச்சாட்டு: 5,000 ரூபாய் அபராதம். அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை.
- இரண்டாவது குற்றச்சாட்டு: 100,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை. சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது குற்றச்சாட்டு: 25,000 ரூபாய் அபராதம். அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை.
இந்த வழக்கில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி ஒப்புக்கொண்டார்.
இதற்கான தண்டனை கடந்த நவம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், அது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை! appeared first on LNW Tamil.