புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சனைக்கு தீர்வு காண ஏழு பேர் கொண்ட குழு.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விசாரணைகளைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.