தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில் இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2026 ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 4.7 சதவீதமாக பதிவாகியிருந்தது.
ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவின் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம், மே மாதத்தில் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பதிவான 7.8 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே தேசிய பணவீக்கம் மே மாதத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதமே நாட்டின் பணவீக்கம் 5 சதவீதத்தைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு appeared first on LNW Tamil.