2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5.1 சதவீத நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான உற்பத்தி அணுகுமுறையின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பிற முக்கிய பொருளாதாரக் குறியீடுகளை மதிப்பீடு செய்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில், விவசாயத் துறை 1.1 சதவீதமும், தொழில்துறை 7.2 சதவீதமும், சேவைத் துறை 3.4 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொழில்துறையில் பதிவான குறிப்பிடத்தக்க வளர்ச்சியே மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, சேவைத் துறையும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், விவசாயத் துறையிலும் மிதமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி appeared first on LNW Tamil.