Home » 23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

Source

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025 மே 08ஆம் திகதி, கொழும்பு 02, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. நாட்டின் தேசிய விளையாட்டு எனும் முக்கிய இடத்தை வகிக்கும் கரப்பந்தானது, இலங்கை கைப்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த மதிப்புமிக்க போட்டியை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை கரப்பந்து சங்கம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலைகள் கரப்பந்து சங்கத்துடன் இணைவதில், நாட்டின் முன்னணி பாதணிகள் உற்பத்தியாளரான DSI பெருமையடைகின்றது.

1999ஆம் ஆண்டு இலங்கை கரப்பந்து சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த போட்டியை DSI ஆரம்பித்தது. இந்நிகழ்வின் நோக்கம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதும், அவர்கள் திறமைகளை நாட்டின் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வெளிப்படுத்துவதற்கான மேடையை உருவாக்குவதும், அவர்களின் தொழில்சார் வாழ்க்கையினை மேம்படுத்த உதவுவதுமாகும். ஆரம்ப காலத்தில் 198 குழுக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி, இன்று சுமார் 400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. இந்த வருடம், நாடு முழுதிலுமிருந்தும் 4,000 இற்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பில் D. Samson & Sons (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துசித ராஜபக்ஷ தெரிவிக்கையில், “2025 என்பது DSI Supersport கரபந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 23ஆவது ஆண்டு நிறைவை குறிப்பதால், DSI நிறுவனத்திற்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த வருடமாகும். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் இந்த தேசிய அளவிலான மேடைக்கு நாம் ஆதரவளிப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. நமது தேசிய விளையாட்டான கரப்பந்தை மேம்படுத்துவதிலும் பிரபலப்படுத்துவதிலும் இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இப்போட்டிகள் பின்வரும் வயதுப் பிரிவுகளில் இடம்பெறுகின்றன. 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 17 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 19 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர். இந்தப் போட்டி மாவட்ட மற்றும் தேசிய அளவில் இடம்பெறும். மாவட்டப் போட்டிகள் ஜூன் 14, 15, 21, 22, 28, 29 மற்றும் ஜூலை 05, 06, 12, 13, 19, 20, 26, 27 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன. மாவட்ட அளவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகள் தேசிய மட்டத்திற்குத் தகுதி பெறும். இது தொடர்பான போட்டிகள் 2025 ஓகஸ்ட் 20 – 24 இல் நடைபெறும். இறுதிப் போட்டிகள் 2025 நவம்பர் 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறும்.

போட்டிக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து DSI காட்சியறைகளிலும் கிடைக்கும். விண்ணப்பங்களை DSI Supersport உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள QR குறியீடு மற்றும் AVI உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (https://avi.lk/volleyball/) மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களை, 011-2669344 எனும் இலக்கம் மூலம் இலங்கை கரப்பந்து சம்மேளனத்தை தொடர்பு கொள்வதோடு, 25 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது பாடசாலை கரப்பந்து சங்க செயலாளர் சி.எல். குமாரவை 0773329702 எனும் இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அல்லது இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாலகவை [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகில் உள்ள DSI காட்சியறைகளில் சமர்ப்பிக்க முடியும். அல்லது விண்ணப்பங்களை சந்தைப்படுத்தல் பிரிவு இல. 257, ஹைலெவல் வீதி, நாவின்ன, மஹரகம எனும் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2024 மே 14 ஆகும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image