உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஓய்வு பெற்ற கேர்னல் று.ஆ.சு விஜய சுந்தர முன்வைத்த மனுவை இன்று மீண்டும் கவனத்திற்கு எடுத்துக் கொண்ட போது இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உட்பட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.