இலங்கையின் முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஆசிரி ஹெல்த், நாட்டின் மாபெரும் மருத்துவ கண்காட்சி நிகழ்வான Medicare 2023க்கு பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்நிகழ்வு, கொழும்பு BMICH இல் மார்ச் மாதம் 3, 4 மற்றும் 5ஆம் திகதிகளில் இடம்பெறும். Medicare உடன் ஆசிரி குழுமத்தின் கைகோர்ப்பு, பல வருடங்களாக தொடர்வதுடன், முன்னர் இடம்பெற்ற பல கண்காட்சி நிகழ்வுகளின் பிரதான அனுசரணையாளராகவும் திகழ்ந்திருந்தது.
12 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கண்காட்சியை, Medicare ஏற்பாட்டுக் குழு மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் நிறுவனம், விசேடத்துவ மருத்துவ சம்மேளனங்களின் ஆதரவுடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களின் கீழ் ஏற்பாடு செய்துள்ளது. Medicare 2023 நிகழ்வில் 100 க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச காட்சிகூடங்கள் நிறுவப்பட்டிருக்கும் என்பதுடன், அதில் மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் முதல் சுகாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகள் அடங்கலாக பல பொருட்களும் சேவைகளும் உள்ளடங்கியிருக்கும். இந்நிகழ்வு இடம்பெறும் 3 தினங்களில் 10,000க்கும் அதிகமான விருந்தினர்களை எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.