சீரற்ற காலநிலை: பொஸ்னியாவில் அவசர நிலை பிரகடனம்.
பொஸ்னியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் பலர் காணாமல் போயுள்ளனர்.
பொஸ்னியாவில் தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதான ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.