அமெரிக்க – யுக்ரேன் ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை
அமெரிக்க மற்றும் யுக்ரேன் நாடுகளின் ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தொலைபேசி உரையாடலாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
பாதுகாப்பு பிரச்சினை பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அமெரிக்கா, யுக்ரேனுக்கு வழங்கும் இராணுவ ஒத்துழைப்புகளுக்கு யுக்ரேன் ஜனாதிபதி வொலதிமிர் செலன்ஸ்கி இதன்போது நன்றி தெரிவித்தார்.
தமது நாட்டில் ஆகாய பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தை விரைவு படுத்துமாறும் யுக்ரேன் ஜனாதிபதி இதன்போது வேண்டிக்கொண்டார்.