Home » மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வதற்கு தடை.

மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வதற்கு தடை.

Source

நாட்டின் மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பன்றிகளிடையே பரவிவரும் வைரஸ் நோய் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல், வடமேல் உள்ளிட்ட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

நோய் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயினால் உயிரிழந்த பன்றி இறைச்சியை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image