லெபனானிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள்
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய போதிலும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜெயவீர தெரிவித்துள்ளார்.
லெபனானிலுள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.